சம்பளத்தை விட்டுக்கொடுத்த நடிகர்

சம்பளத்தை விட்டுக்கொடுத்த நடிகர்

1/29/2020 2:49:20 PM

சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படம் உருவாகி வருகிறது. டாக்டர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு தொடராமல் இருந்தது. தற்போது அப்பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்ததையடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

இதில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்துக்காக சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளாராம். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடக்கிறது.

Source: Dinakaran

Author Image
murugan