அந்த பார்வைகை பாருய்யா, கெத்த பாருய்யா: கண்ணில் தண்ணி வச்சுண்ட சிம்பு ரசிகர்கள்

அந்த பார்வைகை பாருய்யா, கெத்த பாருய்யா: கண்ணில் தண்ணி வச்சுண்ட சிம்பு ரசிகர்கள்

Samayam Tamil | Updated:

மஹா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து தான் சிம்பு ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள்.

மாநாடு

image

சிம்பு வெயிட் போடுவதும், அதை குறைப்பதும் வழக்கமாகிவிட்டது. முன்னதாக அவர் மாநாடு படத்திற்காக வெயிட்டை குறைத்து செம ஸ்டைலாக மாறினார். பின்னர் படம் பிரச்சனையில் சிக்க சிம்பு வெயிட் போட்டுவிட்டார். இந்நிலையில் மாநாடு பிரச்சனை தீர அந்த படத்தில் நடிக்க வசதியாக சிம்பு கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டைல் சிம்பு

image

மாநாடு படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிம்பு ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள மஹா படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களில் சிம்பு ஸ்லிம்மாக, ஸ்டைலாக உள்ளார். அதை பார்த்த சிம்பு ரசிகர்கள் தலைவன் பழைய மாதிரியே திரும்பி வந்துட்டான்யா என்று கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹன்சிகா

image

மஹா ஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்பு, ஜமீல், ஹன்சிகா இருக்கும் புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். மத்தவங்களுக்கு தான் கஷ்டம் ஆனால் சிம்புவுக்கு ஸ்டைல் தானாகவே வரும் என்கிறார்கள் ரசிகர்கள்.

அப்டேட்

image

மாநாடு படப்படிப்பு இந்த மாதம் 20ம் தேதி துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. சிம்புவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை துவங்க வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படப்பிடிப்பு குறித்த அப்டேட்டுக்காக தான் சிம்பு ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

Source: samayam

Author Image
murugan