மிரட்டப்போகிறார் ஜித்தன்!

மிரட்டப்போகிறார் ஜித்தன்!

1/29/2020 3:27:36 PM

கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம் ‘மிரட்சி’.  ஹீரோவாக அறிமுகமான ஜித்தன் ரமேஷ் இதில் வில்லனாக நடிக்கிறார். நாயகிகளாக ஷ்ரத்தா தாஸ், இனாசஹா நடித்துள்ளனர். படத்தைப் பற்றி இயக்குநர் எம்.வி.கிருஷ்ணாவிடம் கேட்டோம். முழுக்க முழுக்க திரில்லர் கதை இது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை  உருவாக்கியுள்ளோம். ஜித்தன் ரமேஷிடமிருந்து இதுவரையில் காணாத ஒரு நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

க்ளைமாக்ஸ் காட்சிக்காக படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பு நடத்தினோம்.தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும்போது மிக பிரமிப்பாக இருக்கும். இந்த மாதிரியான திரில்லர் கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. ரசிகர்களை மிரள வைக்கும் படமாக இது இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை’’ என்றார்.

Source: Dinakaran

Author Image
murugan