ஆபாச படத்தை பார்க்க வற்புறுத்திய நடிகர்; பெண் உதவியாளரிடம் அத்துமீறல்

ஆபாச படத்தை பார்க்க வற்புறுத்திய நடிகர்; பெண் உதவியாளரிடம் அத்துமீறல்

1/29/2020 5:05:14 PM

தமிழில் ஜீவா நடித்த ரவுத்திரம் படத்திலும், பிரபுதேவா நடித்த ஏபிசிடி (இந்தி) உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் பிரபல நடன இயக்குனரும் ஆவார். இந்தியில் முன்னணி நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். இந்தியில் சுவாமி, ஏஞ்சல், ஹேண்ட்ஸ் அப் உள்ளிட்ட 4 படங்கள் இயக்கி இருக்கிறார். நடன இயக்குனர்கள் சங்கத்தில் நிர்வாகியாகவும் இருக்கிறார்.
 
கணேஷ் ஆச்சார்யா மீது அவரது பெண் உதவி நடன இயக்குனர் ஒருவர் மகராஷ்டிரா பெண்கள் ஆணையத்திலும், மும்பையில் அம்போலி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார். அதில்,’ஆபாச வீடியோவை என்னை பார்க்கச் சொல்லி கணேஷ் ஆச்சார்யா வற்புறுத்தினார். என்னை தவறான வழிக்கு திருப்பிவிட பார்த்தார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே கணேஷ் ஆச்சார்யா மீது ஒரு சிலர் புகார் கூறி உள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த மி டூ புகாரில் ‘நடிகர் நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை தந்தபோது அதை தட்டி கேட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் கணேஷ் ஆச்சார்யா’ என குறிப்பிட்டிருந்தார்.

Source: Dinakaran

Author Image
murugan