Press "Enter" to skip to content

சிங்கம் காட்டுக்கு போச்சாம், முள் குத்துச்சாம், ஓடி வந்துடுச்சாம்: ரஜினியை கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்

Samayam Tamil | Updated:

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்தை சமூக வலைதளவாசிகள் அநியாயத்திற்கு கலாய்க்கிறார்கள்.

ரஜினிகாந்த்

image

பியர் கிரில்ஸின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்துக்கு காலில் முள் குத்திவிட்டது. இது குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரை மரணமாக கலாய்த்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக ரஜினி ரசிகர்களோ அவர் காட்டில் புலியை எல்லாம் சர்வ சாதாரணமாக அடக்கி பியர் கிரில்ஸை வியக்க வைப்பது போன்று புகைப்படம் வெளியிட்டனர். இந்நிலையில் தான் ரஜினி முள் குத்தியதற்கு எல்லாம் பிரஸ் மீட் வைக்கிறார் என்று கலாய்க்கிறார்கள்.

முள் குத்திருச்சுபா

image

யானைக்கு முள் குத்திருச்சின்னு வைத்தியம் பார்த்தவருக்கு கால்லே முள் குத்திருச்சுபா..!

காயம்

image

ரஜினி காட்டுக்கு கிளம்பியதும் கிளம்பினார் மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் குஷியாகிவிட்டார்கள். ஒரு வாரத்திற்கு கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று குதிக்கிறார்கள்.

டூ மச்

image

அது என்னய்யா ரஜினி என்றால் மட்டும் இப்படி கலாய்க்கிறீங்க…

போராட்டம்

image

ரஜினி சொன்னதை எல்லாம் மனதில் வைத்து தான் இந்த கமெண்ட். நாம இப்போ நடு காட்டுல மாட்டிக்கிட்டோம், வெளிய போக நிறைய போராட்டங்களை சந்திக்க நேரிடும்,

இப்படியே போராட்டம் போராட்டம்’னு போனா இந்த நாடே சுடுகாடு ஆகிடும்.!

ஆங்கிலம்

image

பியர் கிரில்ஸ்: சார், ராத்திரிக்கு அனகொண்டா சாப்பிடலாமா…

ரஜினிகாந்த்: எஸ் எஸ் எஸ்ஸ்ஸ்…

பாவம்யா அந்த மனுஷனை ஓவரா தான் கிண்டல் செய்கிறீர்கள்.

#RajiniVsWild

Source: samayam