கொஞ்சமும் பிசுறு தட்டாமல் வெளியான 96 மறுதயாரிப்பு “ஜானு” ட்ரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர். 
 

அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும்  பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெறவுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. 

 

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த  இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது.  இதனை தெலுங்கு ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர் . இதோ  அந்த ட்ரைலர்…
 

[embedded content]

Source: Webdunia.com

Author Image
Ilayaraja