ஆக்‌ஷனுடன் கிளுகிளுப்பு!

ஆக்‌ஷனுடன் கிளுகிளுப்பு!

1/29/2020 5:28:42 PM

நாம அரசியல்ல இருக்கலாம், நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள். படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற லாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது.

இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றினார்கள் என்பதை ஆக்‌ஷனுடன் கிளுகிளுப்பு மற்றும் நகைச்சுவை கலந்து அதற்கு பூதமங்கலம் போஸ்ட் என்று பெயரிட்டு படமாக்கி இருக்கிறோம் என்கிறார் படத்தின் இயக்குநரான ராஜன் மலைச்சாமி.  

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடிப்பவரும் இவரே. ஒளிப்பதிவை பிரேம்குமாரும், படத்தொகுப்பை ஏ.எல்.ரமேஷும் கவனித்துள்ளனர். சிவயன், அர்ஜுன் எழுதிய பாடல்களுக்கு அர்ஜுன் இசையமைக்கிறார். பொன்கோ சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன்கோ விஜயன் மூவரும் கூட்டாக தயாரித்துள்ளார்கள்.

Source: Dinakaran

Author Image
murugan