தனுஷின் அடுத்த 3 படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் இவர்தான்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தடுத்த நான்கு படங்களில் தனுஷ் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்னொரு பிரபல தயாரிப்பாளரின் தயாரிப்பில் தனுஷ் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

கடந்த ஆண்டு வெளியான கோமாளி, எல்கேஜி உள்பட 3 வெற்றிப்படங்களை தயாரித்த ஐசரி கணேஷ், தனுஷின் அடுத்த மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக தனுசுக்கு மொத்தமாக ரூபாய் 75 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த 3 படங்களை இயக்கும் இயக்குனர்கள் பட்டியல் தயாராகி வருவதாகவும் மூன்று படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணு, சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் இந்த மூன்று படங்களும் 2021 ஆம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டில் மூன்று படங்களும் வெளிவரும் என்று கூறப்படுகிறது

Source: Webdunia.com

Author Image
Ilayaraja