மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?

மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?

விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்ப்டமான ‘சூரரை போற்று’ என்றபடத்தில் சூர்யா நடித்த நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் அவர் மீண்டும் ஒரு பிரபல தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்

அந்த தொழிலதிபர் பத்ம விருது பெற்றவர் என்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த ஆராய்ச்சிகளை பிரபல இயக்குனர் ஒருவர் ஆய்வு செய்து வருவதாகவும் இந்த பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது

The post மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy