ஒரே ஒரு வெற்றியால் மொத்த கடனில் இருந்து மீண்ட பிரபல இயக்குனர்!

ஒரே ஒரு வெற்றியால் மொத்த கடனில் இருந்து மீண்ட பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் கமல், அஜீத், சூர்யா உள்பட தொடர்ச்சியாக மாஸ் நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய நிலையில் திடீரென தயாரிப்பு தொழிலில் இறங்கியதால் பெரும் நஷ்டத்தில் மூழ்கினார். இந்தக் நஷ்டத்திலிருந்தும் கடனிலிருந்தும் மீள முடியாமல் அவர் தவிர்த்து மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகள் இருந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் ’தலைவி’ என்ற தொலைக்காட்சி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. இந்த தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் கவுதம் மேனனிடம் இன்னொரு தொலைக்காட்சி தொடரை இயக்கி தர கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இதற்காக அவருக்கு ரூபாய் 20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த பணத்தை வைத்து கவுதம் மேனன் தன்னுடைய பழைய கடன்கள் அனைத்தையும் முடித்துவிட்டு கடனிலிருந்து மீண்டு விட்டதாகவும் இனி புத்துணர்ச்சியுடன் அவர் புது தெம்புடன் மீண்டும் தனது பணியை தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மீண்டும் படம் தயாரிப்பில் ஈடுபட்டு தவறு செய்ய போவதில்லை என்றும் இயக்கத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் அவர் மூன்று திரைப்படங்களை இயக்கவிருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் மாஸ் நடிகர்களையும் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு கவுதம் மேனனுக்கு மிக நல்ல ஆண்டாக அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Source: Webdunia.com

Author Image
Ilayaraja