ஆண்ட்ரியாவை சீண்டிய அனு இமானுவேல்

ஆண்ட்ரியாவை சீண்டிய அனு இமானுவேல்

1/30/2020 11:56:47 AM

விஷால் நடிக்க மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் அனு இமானுவேல். அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள சைக்கோ படத்திலும் நடித்திருக்கிறார் அனு. இதில் ஆண்ட்ரியாவும் நடித்திருக்கிறார். இரண்டு நடிகைகளுடன் பணியாற்றிய அனுபவம்பற்றி மிஷ்கின் கூறும்போது,’ ஆண்ட்ரியாவும் அனு இமானுவேலும் ஒரு காட்சியில் இணைந்து நடித்தனர். அப்போது அனுவிடம் அவரது பாதுகாப்புக்காக ஆண்ட்ரியா ஒரு டிப்ஸ் கொடுத்தார்.

அனு அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என ஆண்ட்ரியாவிடம் கூறினார். அதைக் கேட்டு எனக்கு கோபம் வந்தது. சீனியர் நடிகை ஆண்ட்ரியாவிடம் அனு இப்படி நடந்து கொண்டதும் அவரது தலையில் ஒரு குட்டு வைக்கலாமா என்று தோன்றியது. ஆனால் இரண்டு நடிகைகளும் இந்த விஷயத்தில் மோதல்போக்கு எதுவும் கடைப்பிடிக்கவில்லை. இருவருமே பக்குவப்பட்ட நிலையில் இருந்ததால் பிரச்னை எதுவும் ஏற்படவில்லை’ என்றார்.

Source: Dinakaran

Author Image
murugan