தமிழுக்கு வரும் மலையாள நடிகை

தமிழுக்கு வரும் மலையாள நடிகை

1/30/2020 12:12:36 PM

அறிமுகமான படம் வெளியாவதற்கு முன்பே, மேலும் 2 படங்களில் ஹீரோயினாக நடித்து முடித்து இருக்கிறார், அனிகா விக்ரமன். இதுபற்றிஅவர் கூறுகையில், ‘மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளேன். ஜெகன் சாய் இயக்கிய ஜாஸ்மின் என்ற படத்தில் அறிமுகமானேன். இப்படத்தில் சித்ஸ்ரீராம் பாடிய பாடலின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இயருக்கிறது.

அடுத்து பாபு தமிழ் இயக்கும் க், ஏ.சற்குணம் இயக்கத்தில் விமல் ஜோடியாக எங்க பாட்டன் சொத்து ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அறிமுகமான படம் ரிலீசாவதற்கு முன்பே மேலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் அதிக பயம் ஏற்பட்டு இருக்கிறது. வலிமையான கேரக்டர்கள் மூலம் தமிழில் ஒரு நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம்’ என்றார்.

Source: Dinakaran

Author Image
murugan