சூரரைப்போற்று டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம்

சூரரைப்போற்று டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூரரைப்போற்று என்ற டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என பேட்டி ஒன்றில் இயக்குனர் சுதா கொங்காரா விளக்கி உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

பாரதியாரின் அச்சம் தவிர் கவிதைப்படி சூரன் என்றால் அறிவாளி, கற்று தேர்ந்தவன் என பொருள். அதன்படி பார்த்தால் இப்படத்திற்கு சூரரை போற்று டைட்டில் பொருத்தமாக தோன்றியது. மேலும் பலம் வாய்ந்த போட்டிகள் நிறைந்த துறையில் நுழைந்து, தனெக்கென தனி இடம்பிடித்து , தொழில்துறையில் சூரசம்ஹாரம் நிகழ்த்தியவரின் கதை என்பதாலும் இந்த டைட்டிலை வைக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.
The post சூரரைப்போற்று டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy