8வது வகுப்பு தேர்ச்சியா? விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

8வது வகுப்பு தேர்ச்சியா? விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள ஊராட்சி ஒன்றீயங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
இரவுக் காவலர்

சம்பளம் :

ரூ. 15,700+ இதர படிகள்

கல்வித் தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள்

ஓட்டுநர் பதவிக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் கூடவே வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07.2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://viluppuram.nic.in/notice_category/recruitment/ விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://viluppuram.nic.in/notice_category/recruitment/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.02.2020 மாலை 5.45 மணி
The post 8வது வகுப்பு தேர்ச்சியா? விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy