2019ல் அதிகம் விரும்பப்பட்ட சின்னத்திரை பிரபலம்: டிடியை தோற்கடித்த லோஸ்லியா

2019ல் அதிகம் விரும்பப்பட்ட சின்னத்திரை பிரபலம்: டிடியை தோற்கடித்த லோஸ்லியா

Samayam Tamil | Updated:

சென்னை டைம்ஸின் அதிகம் விரும்பப்படும் சின்னத்திரை பெண்கள் பட்டியலில் லோஸ்லியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

நக்ஷத்ரா நாகேஷ்

image

சென்னை டைம்ஸ் நாளிதழ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி 2019ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள்(பெண்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நக்ஷத்ரா நாகேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் படங்கள், வெப் தொடர்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் டிவி சீரியல் நடிகையாக நடித்தார்.

லோஸ்லியா

image

20 பெயர் கொண்ட பட்டியலில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான லோஸ்லியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கும், கவினுக்கும் இடையேயான காதலுக்காக அதிகம் பேசப்பட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கவினும், லோஸ்லியாவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. லோஸ்லியா படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம்.

சாக்ஷி

image

சென்னை டைம்ஸ் பட்டியலில் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான சரண்யா 3வது இடத்திலும், பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி 4வது இடத்திலும், பிக் பாஸ் 3 புகழ் சாக்ஷி அகர்வால் 5வது இடத்திலும், கிகி விஜய் 6வது இடத்திலும், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்ரியன் 7வது இடத்திலும், திருமணம் புகழ் ஸ்ரேயா 8வது இடத்திலும், விஜே சித்ரா 9வது இடத்திலும், பொன்மகள் வந்தாள் புகழ் ஆயிஷா 10வது இடத்திலும் உள்ளனர்.

அபிராமி

image

பிக் பாஸ் 3 புகழ் அபிராமி 11வது இடத்திலும், கல்யாணம் முதல் காதல் வரை சைத்ரா ரெட்டி 12வது இடத்திலும், பவானி ரெட்டி 13வது இடத்திலும், பாவனா பாலகிருஷ்ணன் 14வது இடத்திலும், விஜே அஞ்சனா 15வது இடத்திலும், ஷிவானி நாராயணன் 16வது இடத்திலும், சபானா ஷாஜஹான் 17வது இடத்திலும், அக்ஷயா 18வது இடத்திலும், ப்ரீத்தி சர்மா 19வது இடத்திலும், தனுஜா கவுடா 20வது இடத்திலும் உள்ளனர்.

பாவனா

image

டைம்ஸ் பட்டியலில் 2018ம் ஆண்டு 2வது இடத்தில் இருந்த டிடி இந்த ஆண்டு 4வது இடத்திற்கு வந்துள்ளார். 2018ம் ஆண்டு பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நக்ஷத்ரா தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். முந்தைய பட்டியலில் 8வது இடத்தில் இருந்த பாவனா தற்போது 14வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

Author Image
murugan