தன் உடையை விமர்சித்தவர்களுக்கு பிரியங்கா சோப்ரா உருக்கமான பதில்…!

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 

இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது  சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். 

 

அந்தவகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசைக்கான 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரியாங்கா சோப்ரா படுகவர்ச்சியான கடல் கன்னி உடையணிந்து உலா வந்தார்.இது அவரது ரசிகர்களால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாவில், “உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். நீங்கள் விரும்புவதை நேசியுங்கள் நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை வாழுங்கள்… உங்களை சுற்றியுள்ளவளிடம் பண்பாக நடந்து கொள்ளுங்கள். இது தான் விஷயமே. வாழ்கை ஒரு அழகிய பரிசு” என தன்னை விமர்சித்தவர்களுக்கு மறைமுகமாக அட்வைஸ் கொடுத்து பிரச்சனைக்கு  சுமூகமாக முற்று புள்ளி வைத்துள்ளார். 

Source: Webdunia.com

Author Image
Ilayaraja