போலீசுக்காக மாறினார் அருண் விஜய்

போலீசுக்காக மாறினார் அருண் விஜய்

1/30/2020 3:58:10 PM

அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா படம், வரும் பிப்ரவரி 21ம் தேதி ரிலீசாகிறது. இதையடுத்து விஜய் ஆண்டனியுடன் இணைந்து அக்னிச் சிறகுகள் படத்தில் நடிக்கும் அவர், போலீஸ் அதிகாரியாக சினம் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆக்‌ஷன் திரில்லர் படங்களை ரசிப்பவர்களுக்கு சினம் படம் மிகவும் பிடிக்கும்.

போலீஸ் அதிகாரி வேடத்துக்காக உடற்பயிற்சி செய்து, உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன். டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன் சொன்னபடி மேனரிசங்களை வெளிப்படுத்தி நடித்தேன். பாலக் லால்வானி ஹீரோயின். ஒவ்வொரு ஹீரோவுக்கும் போலீஸ் வேடம் என்பது மிகப் பெரிய லட்சிய வேடமாக இருக்கும். என் லட்சியம், சினம் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது’ என்றார்.

Source: Dinakaran

Author Image
murugan