சில்மிஷம் செய்ய முயன்றவரின் விரலை உடைத்த நடிகை டாப்ஸி

சில்மிஷம் செய்ய முயன்றவரின் விரலை உடைத்த நடிகை டாப்ஸி

1/30/2020 5:04:03 PM

பொது இடங்களுக்கு வரும் நடிகைகளிடம் சிலர் அத்துமீறுகின்றனர். நடிகை டாப்ஸியிடம் கோயிலில் சில்மிஷம் செய்ய முயன்ற நபருக்கு அவர் தக்க பாடம் புகட்டி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் நான் குருபூரம் நிகழ்வின்போது சீக்கிய கோயிலுக்கு செல்வேன். அங்கு ஒருபகுதியில் வரிசையாக ஸ்டால்கள் அமைத்து உணவுகள் வழங்கப்படுவது வழக்கம்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் கூட்டம் நிரம்பியிருக்கும். தள்ளுமுள்ளும் ஏற்படும். அப்பகுதியில் நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று எனக்கு உள்ளுணர்வு சொன்னது. என்னை தற்காத்துக் கொள்ள மனரீதியாக தயாராக இருந்தேன்.

அப்போது ஒரு நபர் பின்பக்கத்திலிருந்து என்னை தவறான எண்ணத்துடன் தொட முயன்றார். உடனடியாக அவரது கைவிரல்களை பிடித்து முறுக்கினேன். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இப்படிப்பட்டவர்களின் கையை உடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை நான் ஏற்கனவே எதிர்கொண்டதால் எச்சரிக்கையாக இருந்தேன். இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Source: Dinakaran

Author Image
murugan