ராதாரவியை எதிர்த்து அதிரடியாக போட்டியிடும் சின்மயி

ராதாரவியை எதிர்த்து அதிரடியாக போட்டியிடும் சின்மயி

டப்பிங் யூனியன் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருந்து வரும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளார்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சின்மயியை டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து ராதாரவி நீக்கினார் என்பதும் இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற சின்மயிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது என்பதும் தெரிந்ததே

இருப்பினும் சின்மயி பெயர் டப்பிங் யூனியன் வாக்காளர் பட்டியலில் தற்போது இல்லை எனவே அவரது வேட்புமனு ஏற்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
The post ராதாரவியை எதிர்த்து அதிரடியாக போட்டியிடும் சின்மயி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy