விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் தலைப்பு குறித்த தகவல்

விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் தலைப்பு குறித்த தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விஜய் சேதுபதியின் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு காத்துவாக்கில் ரெண்டு காதல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இந்த படத்தை ஏற்கனவே அவர் கடந்த 2016ஆம் ஆண்டே தொடங்கவிருந்தார் ஆனால் அந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
The post விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் டைட்டில் குறித்த தகவல் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy