10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2019-2020 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு பிப்ரவரி 21 முதல் 28 வரையிலும், தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 26 முதல் 28-ம் தேதி வரையிலும் ஏதேனும் ஒரு நாளில் செய்முறை பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதன் மதிப்பெண் பட்டியலை மார்ச் 3 ஆம் தேதிக்குள் மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தனித்தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பிப்ரவரி 26 முதல் 28 வரை ஏதேனும் ஒரு நாளில் தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது
The post 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy