’மாறா தீம்’ஐ அடுத்து ‘வெய்யோன் சில்லி’: ஜிவி பிரகாஷின் அறிவிப்பு

சூர்யா நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதால் தொழில்நுட்ப பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மாறா தீம்’ என்ற பாடல் சூர்யாவின் குரலில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

பாடலாசிரியர் விவேக் எழுதிய வெய்யோன் சில்லி’ என்று தொடங்கும் இந்த பாடலை ஹரி சிவராம கிருஷ்ணன் என்பவர் பாடியுள்ளதாகவும் இந்த பாடலின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் மிக விரைவில் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்றும் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார் இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கி வெய்யோன் சில்லி’ என்ற பாடலின் வரியை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்

நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

The next single from #SooraraiPottru is #veyyonsilli #வெய்யோன்சில்லி sung by #harishsivaramakrishnan written by @Lyricist_Vivek … @Suriya_offl #SudhaKongara @2D_ENTPVTLTD … date and time will be announced by @2D_ENTPVTLTD @SonyMusicSouth .. excited

Source: Webdunia.com

Author Image
Ilayaraja