மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்..

மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்..

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆனால், வாழ்க்கையை சிறப்பாய் வாழ பணம் வேண்டும். உடை, உணவு, உறைவிடம் என மனிதன் உயிர் வாழ தேவையான அத்தியாவசியமானவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள பணம் வேண்டும். என்னதான் கடுமையாய் உழைத்து, சிறுக சிறுக சேர்த்து வைத்தாலும் சிலருக்கு பணம் சேர்க்கை இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அருட்பார்வை கிடைக்கவில்லை என பெரியவர்கள் சொல்வார்கள்.

மகாலட்சுமியின் அருட்பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டுமென இப்போது பார்க்கலாம்…

மகாலட்சுமி தோத்திரம்…

பத்மாஸன ஸ்திதே தேவிபரப்ரம்ம ஸ்வரூபிணி பரமேஸி ஜகன்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வக்ஞயே ஸர்வ வர்தே ஸர்வ துஷ்ட பயம்காரீ ஸர்வ துக்க ஹர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பொருள்..

பத்மம் எனப்படும் தாமரையின் மீது வீற்றிருக்கும் லட்சுமி தாயே! பிரம்ம ஸ்வரூபம் எனப்படும் அனைத்தின் வடிவமாக இருப்பது நீயே. உலகங்கள் அனைத்திற்கும் ஜகன்மாதாவாக இருக்கின்ற மகாலட்சுமி தாயே! உன்னை நமஸ்கரிக்கிறேன். எல்லா ஞானங்களின் வடிவாக இருக்கின்ற தாயே. எல்லோருக்கும் நலங்கள் அனைத்தையும் அருளி, பயங்கள் அனைத்தையும் நீக்குபவளே, எங்களது துன்பங்கள் அனைத்தையும் அறுப்பவளான மகாலட்சுமி தேவி உன்னை நமஸ்கரிக்கிறேன் என்பதே இந்த தோத்திரத்தின் பொருளாகும்.

தோத்திரம் சொல்லும் முறை…

இந்த தோத்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு மகாலட்சுமியின் படத்ன்முன் விளக்கேற்றி, ஏதேனும் ஒரு பழத்தை நைவேத்தியமாக வைத்து, 27 முறை அல்லது 108 முறை துதிக்க வேண்டும். இந்த தோத்திரத்தை சொல்பவர்கள் உடல் மனத்தூய்மையோடு இருப்பது அவசியம். மேலே கூறப்பட்ட வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உங்களுக்கு “லட்சுமி கடாட்சம்” உண்டாகும். தினமும் சொல்ல முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் மட்டுமாவது வீடு அல்லது தொழில் நிறுவனத்தில் லட்சுமி விளக்கு அல்லது காமாட்சி விளக்குகளில் விளக்கெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வந்தால் மகாலட்சுமி மகாலட்சுமி கடாட்சம் கிட்டும்.
The post மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்.. appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy