இப்படி ஓர் இன்பம்… “கேப்மாரி” பட காணொளி பாடல்!

நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர் “கேப்மாரி ” என்ற படத்தை இயக்கியுள்ளார். 
 

இப்படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி  நடித்துள்ளனர். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இது தான் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.  

 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ” இப்படி ஓர் இன்பம்.”  என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. எல்லை மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தி ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் கொஞ்சமும் யோசிக்காமல் நடித்துள்ளார் நாயகி வைபவி. இதோ அந்த பாடல்…   
 

[embedded content]

Source: Webdunia.com

Author Image
Ilayaraja