பிக்பாஸ் மதுமிதா உடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் மதுமிதா உடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்

கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் நிகழ்ச்சியின் இடையிடையே வெளியேற்றப்பட்டார்கள் என்பது தெரிந்ததே

கல்லூரி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை காமெடியாக சொல்லப்போக சரவணன் வெளியேற்றப்பட்டார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே தற்கொலைக்கு முயன்றதாக மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் தற்போது இணைந்து விளம்பர படமொன்றில் நடித்து வருகின்றனர்

இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இருவரும் ஒரே விளம்பர படத்தில் இணைந்து நடிப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது
The post பிக்பாஸ் மதுமிதா உடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy