மறுமணம் செய்த பிரபல நடிகைக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து

மறுமணம் செய்த பிரபல நடிகைக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து

Samayam Tamil | Updated:

மறுமணம் செய்த நடிகை திவ்யா உன்னிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

திவ்யா உன்னி

image

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த திவ்யா உன்னி டாக்டர் சுதிர் சேகரை திருமணம் செய்த பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அவருக்கு அர்ஜுன், மீனாட்சி என்று இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். கணவரை பிரிந்து விவாகரத்து பெற்ற திவ்யா அருண் குமார் என்கிற என்ஜினியரை மறுமணம் செய்தார். கடந்த 2018ம் ஆண்டு அவர்களுக்கு மறுமணம் நடந்தது. இந்நிலையில் திவ்யா மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆனார்.

பெண் குழந்தை

image

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னி கடந்த 14ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயர் வைத்துள்ளார்கள். திவ்யா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.

குடும்ப புகைப்படம்

image

திவ்யா உன்னி வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் மூன்று குழந்தைகள், கணவன், மனைவி உள்ளனர். அவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக இருந்தவர் திவ்யா உன்னி. இன்னும் சிங்கிளாகவே இருக்கும் பல 90ஸ் கிட்ஸ் ஏக்கப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

நடனம்

image

அமெரிக்காவில் வசித்து வரும் திவ்யா உன்னி அங்கு நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு நடனம் என்றால் உயிர். 3 வயதில் இருந்து நடனம் ஆடி வருகிறார். நடனப் பள்ளியை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தான் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது கணவர் திவ்யாவுக்கு ஆதரவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

Author Image
murugan