தவறான தகவல்களை நம்பாதீங்க – யோகி பாபு

தவறான தகவல்களை நம்பாதீங்க – யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, தன்னைப் பற்றி வந்த தவறாக தகவல்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக யோகிபாபு வலம் வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் யோகிபாபு செல்லும் இடங்களில் எல்லாம் அவரது திருமணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. கடந்த மாதம் ஒரு நடிகையுடன் இணைத்து திருமண செய்தி வெளியாகி அதை மறுத்தார். 

இந்நிலையில் யோகி பாவுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்கள். 

அவரோ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக திருநெல்வேலியில் இருக்கிறார். அவருக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வரவே, தனது ட்விட்டர் தளத்தில் “என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan