இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு, வெளங்கிடும்: சிம்பு ரசிகர்கள்

இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு, வெளங்கிடும்: சிம்பு ரசிகர்கள்

Samayam Tamil | Updated:

சிம்புவுடன் மகத் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

சிம்பு

image

சிம்பு தன் நெருங்கிய நண்பர் என்று மகத் பெருமையாக கூறி வருகிறார். ஆனால் சிம்பு செய்யக் கூடாத சில விஷயங்களை செய்வதே மகத்தால் தான் என்று அவரின் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். அதனால் மகத்தை பார்த்தாலே தயவு செய்து சிம்புவை விட்டு தள்ளி இருங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மஹா படப்பிடிப்பு

image

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் சிம்பு விமானியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மஹா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் மகத் மற்றும் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியும் உள்ளனர். சனம் ஷெட்டி தன் கையில் ஷாம்பெய்ன் பாட்டிலுடன் நிற்கிறார்.

சிம்பு

image

மஹா படத்தில் சிம்புவே கவுரவத் தோற்றத்தில் தான் வருகிறார். இந்நிலையில் மகத்திற்கு அங்கு என்ன வேலை என்கிற கேள்வி எழுந்துள்ளது. சிம்புவின் தீவிர ரசிகை என்பதால் சனம் ஷெட்டியை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. ஆனால் மகத்தை சிம்புவுடன் பார்த்த அவரின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மகாபிரபு நீங்க அங்கேயும் போயிட்டீங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகத்

image

சிம்பு மகத்தை விட்டு தள்ளி இருந்தால் நன்றாக இருப்பார் என்பது அவரின் ரசிகர்களின் நினைப்பு. அதனால் தான் மகத்தை சிம்புவுடன் பார்த்ததும் டென்ஷன் ஆகிறார்கள். மேலும் மகத்திற்கு பிப்ரவரி மாதம் பிராச்சி மிஸ்ராவுடன் திருமணம் நடக்க உள்ளது. சிம்பு சிங்கிளாகவே இருக்கிறார் நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கோ என்று ரசிகர்கள் மகத் மீது செம கடுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Title mahat raghavendra, sanam shetty spotted with simbu at maha shootingspot

(Tamil News from Samayam Tamil , TIL Network)

Source: samayam

Author Image
murugan