இப்படி ‘டகால்டி’ சந்தானத்தின் தலையில் இடி இறங்கிடுச்சே

இப்படி ‘டகால்டி’ சந்தானத்தின் தலையில் இடி இறங்கிடுச்சே

இப்படி ‘டகால்டி’ சந்தானத்தின் தலையில் இடி இறங்கிடுச்சே
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த டகால்டி படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்தவர்கள் அது இல்லை, இது இல்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசையாய் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் இப்படி பொறுமையை சோதிக்கிறாரே சந்தானம் என்று பலரும் புலம்பியுள்ளனர். ஏற்கனவே படத்தை பார்த்தவர்கள் முடியல, சுத்தமா முடியல என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மேலும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.

அதாவது சந்தானத்தின் டகால்டி படத்தை அதுவும் நல்ல பிரிண்ட்டில் ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படத்தை பார்க்க தியேட்டர் வரை செல்ல வேண்டுமா என்று யோசித்தவர்கள் கூட அதை தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்துள்ளனர்.

நான் பிக் பாஸ் வீட்டில இருந்தப்போ சனம் மாஜி காதலருடன் சேர்ந்து நைட்…: தர்ஷன் பரபர

தற்போது எல்லாம் எந்த புதுப்படம் ரிலீஸானாலும் உடனே அது தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டதா என்று தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் ரஜினி, விஜய் ஆகியோரின் படங்களையே ரிலீஸான கையோடு கசியவிட்டு தயாரிப்பாளர்களை கவலையில் ஆழ்த்துகிறது இந்த தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் ராக்கர்ஸை அடக்க ஸ்டார் அல்ல சூப்பர் ஸ்டார் அல்ல அதற்கும் மேல் ஒருவர் வர வேண்டும் போல் இருக்கிறது.

Dhanush அமலா பால், விஜய் பிரிய தனுஷ் தான் காரணம்: ஏ.எல். அழகப்பன்

Source: samayam

Author Image
murugan