ஆசையா போட்டோ வெளியிட்ட சவுந்தர்யா: கந்துவட்டி கபாலின்னு கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்

ஆசையா போட்டோ வெளியிட்ட சவுந்தர்யா: கந்துவட்டி கபாலின்னு கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்

Samayam Tamil | Updated:

சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆசையாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த தமிழக ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளார்கள்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்

image

ரஜினிகாந்த் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவருடன் இளைய மகள் சவுந்தர்யாவும் சென்றிருந்தார். இந்நிலையில் ரஜினி தனது மகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை சவுந்தர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மகிழ்ச்சி

image

புகைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்களோ, அதே ரத்தம் அப்படித் தான் இருக்கும். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். தலைவர் பல காலம் நலமுடன் வாழ வேண்டும். மகிழ்ச்சி, சிறப்பு. புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி. அடுத்த முறை அப்பா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும்போது அவரையும் அழைத்து வரவும் என்று தெரிவித்துள்ளனர்.

கந்துவட்டி

image

சவுந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சிலர் வந்துட்டேன்னு சொல்லு கந்து வட்டி கபாலி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று கலாய்த்துள்ளனர். ரஜினி தனது நெருங்கிய நண்பர்களுக்கு 18 சதவீத வட்டிக்கு கடன் கொடுத்த விவகாரம் அறிந்த பிறகு இப்படி பேசுகிறார்கள்.

முள்

image

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது காலில் முள் குத்திவிட்டதாக ரஜினி தெரிவித்தார். அதனால் தான் முள் குத்திச்சே சரியாகிவிட்டதா என்று விஜய் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். தர்பார் ரிலீஸானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் ரஜினி விஷயத்தில் ஒருவித கடுப்புடன் தான் கமெண்ட் போடுகிறார்கள்.

Source: samayam

Author Image
murugan