தனுஷ்40 படத்தின் முதல் பார்வை அப்டேட் !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ்40 படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன்  இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்றது. சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிப்பதால் இதன் டைட்டில் சுருளி என்று கூறப்படுகிறது. அத்துடன் தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது. 

 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவலை படத்தின்  தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்ததுடன் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது என கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Source: Webdunia.com

Author Image
Ilayaraja