சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புரோபஷனல் அசிஸ்டெண்ட், கார்பெண்டர் உள்ளிட்ட ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள் காலியாக இருப்பதாகவும், இந்த காலி பணியிடங்களை நிரப்பும்பொருட்டு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று http://www.annauniv.edu இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வேலைவாய்ப்பின் படி டீச்சிங், புரோபஷனல் அசிஸ்டெண்ட் 1, அப்ளிகேஷன் புரோகிராமர் ஆகிய பி.டெக், பி.இ, எம்எஸ்சி தகுதியிலான பதவிகளும், பிளம்பர், கார்பெண்டர் பதவிகளுக்கும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிகள்:

ஆசிரியர் பணிக்கு மொத்தம் 12 பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக பணியாகும். தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் இளநிலை, முதுநிலை இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். கணிதத்துறை விண்ணப்பதாரர்கள் முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில் படித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் அல்லாத பணிகள் :

புரேபஷனல் அசிஸ்டெண்ட் – 1, புரோபஷனல் அசிஸ்டெண்ட் III, பியூன், கிளரிக்கல் அசிஸ்டெண்ட், கார்பெண்டர், எலக்ட்ரீசியன் ஆகிய ஆசிரியர் அல்லாத பணிகள் ஆகும். கல்வித் தகுதி :

பியூன், எலெக்ட்ரிசீயன், கார்பெண்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

புரொபஷனல் அசிஸ்டெண்ட் 1 பணிக்கு B.E (CSE / IT) படிப்பு, புரோபஷனல் அசிஸ்டெண்ட் III பணிக்கு ECE டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான சம்பளம் தினக்கூலி அடிப்படையில் வழங்கப்படுகிறது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை தறவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025.

இந்த வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.annauniv.edu/more.php பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2020
The post சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy