காதலர் தினத்தில் ரீ-வெளியீடு ஆகும் ஜோக்கர்: கடுப்பான டிசி ரசிகர்கள்!

டிசி காமிக்ஸின் பிரபலமான வில்லன் கதாப்பாத்திரமான ஜோக்கரின் கதை தனி படமாக கடந்த டிசம்பரில் வெளிவந்தது. 18+ வயதுடையோர் மட்டுமே பார்க்க கூடிய அளவில் வெளியான இந்த படம் பெரும் ஹிட் அடித்ததோடு 1 பில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து ஹாலிவுட்டை திகைக்க வைத்தது. பொதுவாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்படுவதில்லை. ஆனால் இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டதுடன், உலக திரைப்பட விழாக்களிலும் பல்வேறு முக்கியமான விருதுகளை வாங்கி சாதனை படைத்துள்ளது.

கேன்ஸ் விழாவில் தங்க சிங்கம் விருது வாங்கி காமிக்ஸ் கதையிலிருந்து படமாக வந்து கேன்ஸில் விருது வாங்கிய படமாக புதிய சாதனையை ஏற்படுத்தியது. ஆஸ்கர் விழாவில் மற்ற படங்களுக்கு நிகராக 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு பெரும் போட்டியில் இருக்கிறது ஜோக்கர்.

இந்நிலையில் ஜோக்கர் படத்தை பிப்ரவரி 14 அன்று ரீரிலீஸ் செய்ய வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சோதனையாக இந்த படம் டிசி காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இதற்கு முன்னால் வெளிவந்த ஜஸ்டிஸ் லீக் படத்தின் முந்தைய இயக்குனர் ஜாக் ஸ்னைடரின் வெர்சனை வெளியிடுமாறு கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள டிசி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் ஜோக்கரை மீண்டும் வெளியிடுவது டிசி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Source: Webdunia.com

Author Image
Ilayaraja