பாஜகவில் திடீரென இணைந்த ‘தளபதி 65’ பட இயக்குனர்?

பாஜகவில் திடீரென இணைந்த ‘தளபதி 65’ பட இயக்குனர்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் இயக்குனர் பேரரசு. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’திருப்பாச்சி’ மற்றும் ’சிவகாசி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கூறிய குடும்ப சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் கதை ஒன்று விஜய்க்கு ரொம்பவே பிடித்து விட்டதால் இவர்தான் ’தளபதி 65’ படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ள இயக்குனராக கருதப்படுகிறார்

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு திடீரென நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பாஜகவில் இணைந்து கொண்டார். பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பாஜகவின் உறுப்பினர் அட்டையும் அவர் பெற்றுக் கொண்டு நேற்று முதல் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்க இருக்கும் நேரத்தில் திடீரென அவர் பாஜகவில் இணைந்தது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

The post பாஜகவில் திடீரென இணைந்த ‘தளபதி 65’ பட இயக்குனர்? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy