காஞ்சிபுரம் காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் – 01 காலிப்பணியிடம்
மாவட்ட பொது தனியார் ஒருங்கிணைப்பாளர் – 01 காலிப்பணியிடம்
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் – 03 காலிப்பணியிடங்கள்
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் – 01 காலிப்பணியிடம்
ஆலோசகர் – 02 காலிப்பணியிடங்கள்
தகவல் பதிவு கணினி பொறியாளர் – 02 காலிப்பணியிடங்கள்
சுகாதார பார்வையாளர் – 14 காலிப்பணியிடங்கள்
ஆய்வக நுட்புநர் – 11 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

12 / டிப்ளமோ / டிகிரி (இளநிலை / முதுநிலை)

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 65 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/01/2020012660.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2020 மாலை 5.45 மணி

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 28.02.2020, 29.02.2020
The post காஞ்சிபுரம் காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy