Press "Enter" to skip to content

Dhanush சத்தியமா இதை எதிர்பார்க்கவே இல்லை தனுஷ்

Samayam Tamil | Updated:

தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷ், கார்த்திக் நரேன்

image

துருவங்கள் 16 படம் புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தற்போதைக்கு டி 43 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. தனுஷ், கார்த்திக் கூட்டணி சேரும் படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது குறித்த தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தனுஷ், ஜி.வி. பிரகாஷ்

image

தனுஷ், அனிருத் கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் தான் தனுஷ், ஜி.வி. பிரகாஷ் கூட்டணி அமைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு ஜி.வி. மிரட்டளாக இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் போன்று டி 43 படத்திற்கும் இசை சும்மா தெறிக்கும் என்று நம்பப்படுகிறது.

எதிர்பார்க்கவில்லை

image

கார்த்திக் நரேன் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் டி 43 குறித்து தனுஷ் வெளியிட்ட அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருக்கு சிறப்பான, தரமான சம்பவம் இருக்கு என்று தெரிவித்துள்ளனர். டி43 படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். கார்த்திக் வித்தியாசமான ஆள் என்பதால் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

கர்ணன்

image

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் கர்ணன் படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தான் ஹீரோயின். யோகி பாபு, நட்டி, மலையாள நடிகர் லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Source: samayam