Press "Enter" to skip to content

இன்னக்கின்னு பார்த்து நேரம் ஓட மாட்டேங்குதே: 5 மணிக்காக சி.கா. ரசிகர்கள் வெயிட்டிங்

இன்னக்கின்னு பார்த்து நேரம் ஓட மாட்டேங்குதே: 5 மணிக்காக சி.கா. ரசிகர்கள் வெயிட்…
சிவகார்த்திகேயன் நேற்று இன்று நாளை படம் புகழ் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். எஸ். கே. 14 என்று தலைப்பு வைக்கப்பட்ட அந்த படத்தின் வேலை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன், ரகுல் ஜோடி சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் எஸ்கே 14 படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று சிவகார்த்திகேயன் ட்விட்டரில் அறிவித்துள்ளார். தலைப்பை ஏ. ஆர். ரஹ்மான் வெளியிடுகிறார்.

#SK14 title today.. Excited https://t.co/zIAPFZdZHh

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

1580709663000

Dhanush சத்தியமா இதை எதிர்பார்க்கவே இல்லை தனுஷ்

அந்த அறிவிப்பை பார்த்த சிவகார்த்திகேயனின் ரசிகர்களோ, இன்னைக்குன்னு பார்த்து நேரம் ஓடவே மாட்டேங்குதே என்று தெரிவித்துள்ளனர். 5 மணி எப்பொழுது வரும் தலைப்பை பார்த்துவிட்டு அதை ட்விட்டரில் டிரெண்டாக்க வேண்டும் என்று ரசிகர்கள் உள்ளனர்.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை சுமாரான வரவேற்பை பெற்றது. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பர்த்டே பாய் சிம்பு பற்றிய 5 ரகசியங்கள் தெரியணுமா?

எஸ்கே 14 படத்தை சிவகார்த்திகேயன் மட்டும் அல்ல அவரின் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Source: samayam