தேர்தல் நடைபெறும் நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் காவல் துறை: டெல்லியில் பரபரப்பு

தேர்தல் நடைபெறும் நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் காவல் துறை: டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் ப்ரீத்தி என்பவர் நேற்று மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம ஆசாமி ஒருவர் அவரது தலையில் சுட்டுக் கொன்றுள்ளார்

இதனையடுத்து ப்ரீத்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
The post தேர்தல் நடைபெறும் நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் போலீஸ்: டெல்லியில் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy