யார் அந்த ‘உ’, யார் அந்த ‘ப’: விஜய் வீட்டில் ரெய்டு குறித்த முத்தரசன்

யார் அந்த ‘உ’, யார் அந்த ‘ப’: விஜய் வீட்டில் ரெய்டு குறித்த முத்தரசன்

தளபதி விஜய் வீட்டில் சமீபத்தில் நடந்த ரெய்டு குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஒரு திடுக்கிடும் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவது மட்டுமல்லாமல் படப்பிடிப்புத் தளத்திலும் தகராறு செய்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விஜய்யை பாஜக படியவைக்க முயல்கிறதோ என சந்தேகம் ஏற்படுகிறது. படப்பிடிப்புத் தளத்தில் பாஜகவினர் ரகளை செய்தது கடும் கண்டனத்துக்குரியது.

அதேபோல், திரைப்படத் துறையினருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் மதுரை அன்புச்செழியனிடத்தில் இருப்பது தமிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ‘ப’ எழுத்தில் தொடங்கும் முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் ‘உ’ எழுத்தில் தொடங்கும் பிரமுகரின் பணம் எனக் கூறப்படுகிறது. வருமானவரித் துறை நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காக அல்லாமல் உண்மையிலேயே ரெய்டு நடத்தியிருந்தால் யார் அந்த ப? யார் அந்த உ? எனக் கூற வேண்டாமா?” என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post யார் அந்த ‘உ’, யார் அந்த ‘ப’: விஜய் வீட்டில் ரெய்டு குறித்த முத்தரசன் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy