குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரம் சொல்வோம்!!

குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரம் சொல்வோம்!!

பதினாறு செல்வங்கள் இருந்தாலும் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அத்தனையும் வீண். அதனால் கணவன், மனைவிக்கிடையேயான பிணக்கு நீங்கி ஒற்றுமை உருவாக கீழ்க்காணும் ராதா கிருஷ்ணர் மந்திரத்தினை தினமு 108 முறை சொல்லி வர கைமேல் பலன் கிடைக்கும்.

மந்திரம்..

ராதேஸம் ராதிகாப்ராண

வல்லபம் வல்லவீஸுதம்

ராதேஸேவித பாதாப்ஜம்

ராதா வக்ஷஸ்தலஸ்திதம்

ராதானுகம் ராதிகேஷ்டம்

ராதாபஹ்ருத மானஸம்

ராதாதாரம் பவாதாரம்

ஸர்வாதாரம் நமாமிதம்

கிருஷ்ணன் தன் ஆசைக்குரிய ராதையை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மனதில் ராதா – கிருஷ்ணனை நினைத்தவாறு குறைந்த பட்சம் 108 முறை உரு ஜெபித்து வந்தால் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் கணவன் – மனைவி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பிப்பார்கள். பல காரணங்களுக்குகாக ஏற்பட்ட சண்டையால் பிரிந்திருக்கும் உறவினர்களும், நண்பர்களும் மீண்டும் ஒன்று சேர்வர்.
The post குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரம் சொல்வோம்!! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy