நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிய நாய்: திருமண வீட்டில் பரபரப்பு

நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிய நாய்: திருமண வீட்டில் பரபரப்பு

தென்னாபிரிக்காவில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென அவருக்காக வைக்கப்பட்டுள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை அவர் ஆசை ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று விழுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பெப்பி என்று கூறப்படும் அந்த நாய் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மோதிரத்தை விழுங்கிவிட்டது. இதை பார்த்த திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக அந்த நாய் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு எக்ஸ்ரே எடுக்கும்போது உள்ளே மோதிரம் இருந்தது தெரிந்தது

இதனையடுத்து அந்த நாய்க்கு ஆபரேஷன் செய்து மோதிரத்தை வெளியே எடுத்து அதன் பின்னர் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்தினர்.

ஆசை ஆசையாக வளர்த்த நாயை தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கினாலும், அந்த நாய் மீது கொண்ட பாசத்தை சிறிதளவும் அந்தப் பெண் குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
The post நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிய நாய்: திருமண வீட்டில் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy