ரஜினி கட்சியில் யார் யார் கூட்டணி? புதிய தகவல்

ரஜினி கட்சியில் யார் யார் கூட்டணி? புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் கட்சி ஆரம்பிப்பது உறுதி என அவரது வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

ரஜினியின் கட்சியில் டிடிவி தினகரனின் அமமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருக்காது என்றே கூறப்படுகின்றது

விஜயகாந்தின் தேமுதிக, டாக்டர் ராமதாஸின் பாமக மற்றும் வைகோவின் மதிமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் அதன் கூட்டணி கட்சியில் பிணக்கு இருப்பதால் இந்த கட்சிகள் ரஜினி கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

அதேபோல் முக அழகிரி உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் குறிப்பாக அதிமுக, திமுகவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் ரஜினி கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

2020ஆம் ஆண்டு ஏப்ரலில் கட்சி, ஆகஸ்டில் முதல் பொதுக்கூட்டம், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்பதுதான் ரஜினியின் மெகா திட்டம் என கூறப்படுகிறது
The post ரஜினி கட்சியில் யார் யார் கூட்டணி? புதிய தகவல் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy