மீண்டும் அரிவாளை கையில் எடுத்த தனுஷ்: கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட விளம்பர ஒட்டி

மீண்டும் அரிவாளை கையில் எடுத்த தனுஷ்: கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட விளம்பர ஒட்டி

தனுஷ் நடித்த அசுரன் மற்றும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ’சுருளி’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என சற்று முன்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்

இதனை அடுத்து இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகி இந்த அறிவிப்பை ட்ரெண்டாகி வருகின்றனர். மேலும் இந்த படத்திலும் தனுஷ் கையில் அரிவாளுடன் இருப்பது போல் ஒரு போஸ்டரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். ‘அசுரன்’ படத்தை அடுத்து தொடர்ச்சியாக ஒரே மாதிரி படங்களில் அவர் நடிக்கிறாரா? என்ற கேள்வி இந்த போஸ்டரால் எழுந்துள்ளது இந்த கேள்விக்கு படம் வெளியான பின்னர் தான் விடை கிடைக்கும்

#YNOT18 #D40 Wrapped Up this epic production schedule over 6 months, thanks to the leadership of our director @karthiksubbaraj dedication of @dhanushkraja the discipline & enthusiasm of the entire cast & crew. Thank you 🙏🏼 #D40Firstlook on #feb19 #d40firstlookupdate pic.twitter.com/0cxBH6Ngn7— Sash (@sash041075) February 9, 2020

The post மீண்டும் அரிவாளை கையில் எடுத்த தனுஷ்: கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட போஸ்டர் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy