பாஜகவின் போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டமா? பொன்ராதாகிருஷ்ணன்

பாஜகவின் போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டமா? பொன்ராதாகிருஷ்ணன்

நெய்வேலியில் பாஜக நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் அல்ல என்றும் நெய்வேலியில் எந்த படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க கூடாது என்று பொதுவாக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் அதனை எதிர்க்கட்சிகள் விஜய்க்கு எதிராக நடந்த போராட்டமாக திசை திருப்புகின்றனர் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடிய தேர்தல் என்பதால் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுகவிற்கு பிரசாந்த் கிஷோரின் அமைப்பு உதவி செய்வது குறித்து கருத்து கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் ’பிரசாந்த் கிஷோர் உடனான திமுகவின் உறவு சக்கரம் இல்லாத வண்டியை போன்றது என்றும் பிரசாந்த் கிஷோர் வாழ்வில் முதல் முதலாக ஒரு கரும்புள்ளி ஏற்படும் என்று இந்த உறவை நான் கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

பொன்ராதாகிருஷ்ணன் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
The post பாஜகவின் போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டமா? பொன்ராதாகிருஷ்ணன் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy