தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மதுரையில் பணிமனை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், காலியாக உள்ள இந்த பணிமனை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பணிமனை உதவியாளர் – 5

Fitter Sheet Metal Worker Turner Welder Wireman

இனச்சுழற்சி

Fitter – BC (M) (P) Sheet Metal Worker – SC (NP) Turner – MBC/DNC (NP) Welder – BC (NP) Wireman – GT (NP) (W) TM

சம்பளம் :

ரூ. 18,200 முதல் ரூ. 57,900 வரை

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கூடவே அந்தந்த பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

1.1.2020 தேதியின்படி, குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவை சார்ந்தவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC & MBC / DNC பிரிவினர் 32 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST மற்றும் அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை http://www.skilltraining.tn.gov.in அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை தன் கையொப்பமிட்டு இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1yt8WyWmDww3hj91BY1_8fxm8ufMAPvCN/view பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர் / முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
K.புதூர்,
மதுரை-7

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2020 மாலை 5.45 மணிக்குள்
The post தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy