ரஜினிக்கு சலுகை, விஜய்க்கு மிரட்டலா? தயாநிதி மாறன்

ரஜினிக்கு சலுகை, விஜய்க்கு மிரட்டலா? தயாநிதி மாறன்

திமுக எம்பியும் சன் நெட்வொர்க்ஸ் அதிபருமான கலாநிதி மாறனின் சகோதரர் தயாநிதி மாறன் இன்று மக்களவையில் பேசியதாவது:

வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்க்கு ஒரு நீதி என்பது பாரபட்சமானது. ரஜினிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்த வருமான வரித்துறை, விஜய்யை மட்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விசாரணைக்காக வற்புறுத்தி அழைத்து செல்லப்பட்டது ஏன்? என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ள வருமான வரித்துறை விஜய்யை மட்டும் மிரட்டும் வகையில் செயல்படுவது ஏன்? என்று பேசியுள்ளார்.
The post ரஜினிக்கு சலுகை, விஜய்க்கு மிரட்டலா? தயாநிதி மாறன் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy