விஷ்ணு விஷால் நடித்த கும்கி 2 வெளியீடு தேதி அறிவிப்பு

விஷ்ணு விஷால் நடித்த கும்கி 2 வெளியீடு தேதி அறிவிப்பு

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த கும்கி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் என கருதப்படும் ’காடன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஏப்ரல் 2ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்தப் படம் தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புள்ள திரைப்படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள விஷ்ணுவிஷால், முதல்முறையாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படத்தில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Here i come. My first Tamil-Telugu bilingual.Cant wait for you all to see:) #Kaadan (Tamil) and #Aranya (Telugu) releasing on April 2, 2020. Many more updates on the way 🙂 #ErosNow @RanaDaggubati #PrabuSolomon @zyhssn @ShriyaP @ErosIntlPlc pic.twitter.com/2RqwJvUXwq— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) February 10, 2020

The post விஷ்ணு விஷால் நடித்த கும்கி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy