கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: பலி எண்ணிக்கை 1100ஆக அதிகரிப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல்: பலி எண்ணிக்கை 1100ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 160 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பதாகவும் இதுவரை மொத்தம் ஆயிரத்து 110 பேர் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் சுமார் 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் சீனா முழுவதும் பெரும் பரபரப்பில் உள்ளது.

சீனாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் கொடூரமாக பரவி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
The post கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 1100ஆக அதிகரிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy