300 ரூபாய் கொடுத்த கூலி தொழிலாளிக்கு கிடைத்தது 12 கோடி: ஒரு ஆச்சரிய தகவல்

300 ரூபாய் கொடுத்த கூலி தொழிலாளிக்கு கிடைத்தது 12 கோடி: ஒரு ஆச்சரிய தகவல்

கேரளாவில் 300 ரூபாய் கொடுத்து கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரி வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி பம்பர் லாட்டரி சீட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கேரள மாநிலம் கண்ணூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற கூலித்தொழிலாளி கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் 100 அல்லது 150 ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரியை அவர் ரூ.300 கொடுத்து வாங்கி உள்ளார். அவருக்கு இந்த லாட்டரியையே கடன் வாங்கி தான் வாங்கியதாகத் தெரிகிறது

இந்த நிலையில் நேற்று இந்த லாட்டரி குலுக்கல் நடந்த நிலையில் ராஜனுக்கு ரூபாய் 12 கோடி முதல் பரிசு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். தனக்கு முதல் பரிசு விழுந்துள்ளது குறித்து ராஜன் அவர்கள் கூறியபோது ’இந்த பணத்தின் மூலம் நான் வாங்கிய கடனை அடைத்து விடுவேன் என்றும் மீதி தொகையை தனது மகளின் கல்விக்காக செலவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்

அது மட்டுமின்றி என்னை போல் கூலித் தொழில் செய்து வரும் ஏழைகளுக்கு ஒரு ஒரு பகுதியை கொடுத்து உதவுவேன் என்று அவர் கூறியுள்ளது அவருடைய மனிதாபிமானத்தை காட்டுவதாக அனைவரும் கூறி வருகின்றனர்

The post 300 ரூபாய் கொடுத்த கூலி தொழிலாளிக்கு கிடைத்தது 12 கோடி: ஒரு ஆச்சரிய தகவல் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy