கள்ளக்காதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி: உயிரோடு கொளுத்திய கணவர்

கள்ளக்காதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி: உயிரோடு கொளுத்திய கணவர்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் அவரை உயிரோடு எரித்துக் கொலை செய்ததாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் 29 வயதான அனிதா சிங். இவருக்கும் ரவீந்தர் சிங் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது

இந்த நிலையில் அனிதா சிங்கிற்கு தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஒருவருடன் கள்ள காதல் இருப்பதாக ரவீந்தருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை நண்பரின் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்று அங்கு கொலை செய்து அதன் பின்னர் உடலை காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்று எரித்தது உள்ளார்

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது ரவீந்தர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
The post கள்ளக்காதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி: உயிரோடு கொளுத்திய கணவர் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy